கோவாக்சின் தயாரிப்பு முறையைப் பிற நிறுவனங்களுக்கு வழங்க பாரத் பயோடெக் ஒப்புதல்

0 2218
கோவாக்சின் தயாரிப்பு முறையைப் பிற நிறுவனங்களுக்கு வழங்க பாரத் பயோடெக் ஒப்புதல்

கோவாக்சின் தடுப்பு மருந்து தயாரிக்கும் முறையைப் பிற மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கோவாக்சின் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், தடுப்பு மருந்து தட்டுப்பாடு உள்ளது.

இதனால் தடுப்பு மருந்து உற்பத்தியைப் பல மடங்கு அதிகரிப்பதற்காக கோவாக்சின் மருந்து தயாரிக்கும் முறையைப் பிற தடுப்பூசி நிறுவனங்களுக்கு வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments