பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சம்

0 3047
பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சம்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகளும் உயர்த்தப்பட்டு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

அதன்படி பெட்ரோல் விலை   94 ரூபாய் 9 காசுகளாக உயர்ந்துள்ளது. டீசல் விலை 87 ரூபாய் 81 காசுகளாக உயர்ந்துள்ளது.  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு நூறு ரூபாயைத் தாண்டியுள்ளது.

மே மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை ஒரு ரூபாய் ஐம்பது காசுகளும் டீசல் விலை ஒரு ரூபாய் 88 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலையில் 60 விழுக்காடும், டீசல் விலையில் 54 விழுக்காடும் மத்திய மாநில அரசுகளின் வரியாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments