கொடைக்கானல் மலைக்கிராம பகுதிகளில் பரவும் மர்மக் காய்ச்சல் - மக்கள் அச்சம்

0 2736
கொடைக்கானல் மலைக்கிராம பகுதிகளில் பரவும் மர்மக் காய்ச்சல் - மக்கள் அச்சம்

கொடைக்கானல் மலைக்கிராம பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூக்கால், போளூர், கிளாவரை, உள்ளிட்ட மலை கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கை, கால்கள் வலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் சுகாதாரத் துறையினர் கொடுத்த மருந்து மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தை தருவதாகவும் ஒரிரு நாட்களில் மீண்டும் மர்ம காய்ச்சல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து மருத்துவ முகாம்களை அமைத்து சுகாதாரத் துறையினர் தீவிர சிகிச்சை அளிக்க கோரி கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments