இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடும் - நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே. பால்

0 2299
இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடும் - நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே. பால்

இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே. பால் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்திற்குள் 216 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கோவிஷீல்ட் 75 கோடி டோஸ்களும் கோவாக்சின் 55 கோடி டோஸ்களும் தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சீரம் இந்தியா நிறுவனம் 20 கோடி நோவாவாக்ஸ் டோஸ்களையும் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்குவழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை 10 கோடி டோஸ் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

பயலாஜிக்கல்-இ நிறுவனம் 30 கோடி டோஸ்களும், சைடஸ் கேடிலா நிறுவனம் 5 கோடி டோஸ்களும் தயாரிக்கும் பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜெனோவா நிறுவனம் வழங்கும் 6 கோடி டோஸ்களுடன் ரஷ்யாவின் தடுப்பூசியான ஸ்புட்னிக் வி15 கோடி டோஸ்களை தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் வி.கே.பால் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments