கொரோனா சிகிச்சைக்கு உதவும் பாரம்பரிய மருந்துகள்..!

0 7056
கொரோனா சிகிச்சைக்கு உதவும் பாரம்பரிய மருந்துகள்..!

கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க, தாளகம், முத்து மற்றும் பவள பஸ்பங்களை கொடுக்கலாம் என இம்காப்ஸ் தலைவர் மருத்துவர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதே போல் கொரோனாவில் இருந்து குணமான பிறகு பயன்படுத்த வேண்டிய மருந்துகளையும் அவர் வெளியிட்டுள்ளார். 

சென்னையில், கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இம்காப்ஸ் நிறுவனம் சார்பில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன.

சித்த மருந்து வரிசையில் ஓமத் தீநீர், பிரம்மானந்த பைரவம், கபசுரம், வசந்தகுஷ்மாகரம், திப்பிலி ரசாயனம், ஆனந்த பைரவம், தாளிசாதி வடகம், ஆடாதொடை சூரணம் ஆகியவையும், ஆயுர்வேத மருந்து வரிசையில் சுதர்சன சூரண மாத்திரை, சுப்ரவாடி மாத்திரை, இந்துகாந்தம் கசாயம், குடூசி ஸத்வம், அகஸ்திய ரசாயனம், யஷ்டி சூரணம், தாளீசாதி சூரணம் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும், ஷர்பத் ஸூஆல், லபூர் ஸகீர், கௌஹர் ஷீபா உள்ளிட்ட யுனானி மருந்துகளும் வைக்கப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து பேசிய இம்காப்ஸ் தலைவர் கண்ணன், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்க தாளக பஸ்பம், முத்து பஸ்பம், பவள பஸ்பங்களை குடிக்கலாம் என்றார்.

கொரோனாவிலிருந்து மீண்டாலுமே பலருக்கு பசியின்மை, தூக்கமின்மை இருப்பதாக கூறிய அவர், இதுபோன்ற கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளை சரி செய்வதற்கான மருந்துகளாக ஆயுஷ் குடிநீர் சூரணம், அமுக்குரா சூர்ணம் மாத்திரை, ச்யவனப்ரஷ் லேகியம்   ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.

கொரோனா தோயாளிகளுக்கு முதல் நாளிலேயே சித்தா உள்ளிட்ட ஆயுஷ் மருந்துகளை வழங்க மருத்துவர்கள் முன்வர வேண்டும் எனவும், அரசுக்கு ஆலோசனை வழங்கும் மருத்துவ குழுவில் சித்த மருத்துவர்களையும் இணைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

பூர்ண சந்திரோதயம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்போருக்கு கூட நல்ல பலனை தரும், பாலசஞ்சிவி மற்றும் கஸ்தூரி மாத்திரைகளை குழந்தைகளுக்கும் வழங்கலாம் எனவும், இவை கொரோனா காரணமாக இழந்த சுவை, மணம் திரும்ப கிடைக்க உதவும் எனவும் அவர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments