மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்ட கூச் பேஹார் பகுதியை பார்வையிட்ட ஆளுநர்

0 895
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்ட கூச் பேஹார் பகுதியை பார்வையிட்ட ஆளுநர்

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கார் தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்ட கூச் பேஹர் பகுதியை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களைத் துன்புறுத்துவதுதான் தேர்தல் வன்முறையின் நோக்கம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மமதா பானர்ஜியின் பெயரைக் குறிப்பிடாமல் சாடிய அவர் தேர்தலில் வாக்களிக்காத மக்களை பழிவாங்குவதற்கான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாக கூறினார்.

தேர்தலுக்குப் பிறகு நீடிக்கும் வன்முறை மிக்க சூழ்நிலை குறித்து அவர் அதிர்ச்சி தெரிவித்தார். தாம் நினைத்ததை விட நிலைமை மோசமாக இருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மக்கள் அச்சத்தில் வாழ்வதாகவும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் காவல்துறையிடம் வலியுறுத்தினார்.

இதனிடையே ஆளுநர் வன்முறை பகுதிகளை நேரில் ஆராய எதிர்ப்புத் தெரிவித்து அவர் கார் செல்லும் வழியில் பலர் கும்பலாக திரண்டு கருப்புக் கொடி காட்டினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments