விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 8-வது தவணை நிதியை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

0 2005
விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 8-வது தவணை நிதியை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தின் 8-வது தவணை நிதியை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.

பிரதமரின் விவசாயிகள் நிதிஉதவி திட்டப்படி, நாடு முழுவதும் தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது.

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இப்பணம் செலுத்தப்படுகிறது. இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தின் 8-வது தவணைத்தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.

9 கோடியே 50 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வங்கிக்கணக்கில் 19 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்.காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், சில பயனாளிகளுடன் பிரதமர் உரையாடுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments