சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் ரெம்டிசிவர் மருந்து விற்பனை

0 1737
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் ரெம்டிசிவர் மருந்து விற்பனை

ரெம்டிசிவர் மருந்தை சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கூட்டம் திரள்வதைத் தடுக்க தனித்தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.

இதனால் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நோயாளிகளின் உறவினர்கள் மருந்தை தேடி அலைந்தனர். கள்ளச்சந்தை மூலம் அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது.

தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்படுகிறது. அங்கு கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று முதல் பெரியமேட்டில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 4 கவுண்ட்டர்கள் மூலம் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments