ஆக்சிஜன் ரயில் சென்னை வருகை..!

0 5828
ஆக்சிஜன் ரயில் சென்னை வருகை..!

மேற்கு வங்க மாநிலம் தாராப்பூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் முதலாவது விரைவு ரயில் நள்ளிரவில் சென்னை வந்தடைந்தது.

தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் மேற்கு வங்க மாநிலம் தாராப்பூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றிக் கொண்டு விரைவு ரயில் நள்ளிரவில் சென்னை வந்தடைந்தது.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் தண்டையார்பேட்டை ரயில்வே யார்டுக்கு நேரில் சென்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்றனர்.

ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் நான்கு கண்டெய்னர் லாரிகள் வரவழைக்கப்பட்டு லாரி ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன் வீதம் ரயிலில் இருந்து ஆக்சிஜன் மாற்றப்பட்டது.

இதனை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், மேற்கு வங்காளத்தில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தற்போதைக்கு வந்தடைந்துள்ளது என்றும் இது இங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments