தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்று புனித ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

0 2468
தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்று புனித ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

மிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த முடியாதபடி 18 மாநிலங்களில் ஊரடங்கு அமலுக்கு உள்ள நிலையில், வீட்டிலேயே பண்டிகையைக் கொண்டாடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஈத் திருநாள் இந்த ஆண்டு அமைதியான முறையில் கொண்டாடப்படுகிறது. ஈத் பண்டிகையை ஒட்டி வடமாநிலங்களில் நான்கு மணி நேர ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட போதும் மக்கள் வீடுகளை விட்டு வரவில்லை.

சந்தைகளும் இதனால் வெறிச்சோடி மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டன.

வாரணாசி, லக்னோ போன்ற நகரங்களில் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாறாக ஹைதராபாதில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் உற்சாகத்துடன் திரண்டிருந்து சந்தைகளில் இனிப்பு, உலர் பழங்கள், ஆடை அணிகலன்களை வாங்கிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments