தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 30,621 பேருக்கு கொரோனா.. 297 பேர் பலி

0 3931

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2- வது நாளாக 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது. அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா சிகிச்சையில் இருந்து 19 ஆயிரத்து 287 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 30 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

பெருந் தொற்று பாதிப்பிலிருந்து, 19,287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் 88 பேர் உள்பட கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 297 பேர் பலியானார்கள்,

சென்னையில் புதிதாக 6991 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவையில் 2835 பேரும் செங்கல்பட்டில் 2173 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மதுரை - 1331 , திருவள்ளூர் - 1251, கன்னியாகுமரி - 1079, திருச்சி - 940, ஈரோடு - 910, திருநெல்வேலி - 781, திருப்பூர் - 712, காஞ்சிபுரத்தில் 691 , தஞ்சாவூர் - 683 , கடலூர் - 672. வேலூர் - 640, கிருஷ்ணகிரி - 609, திருவண்ணாமலையில் 589
விழுப்புரம் - 571, விருதுநகர் - 564 மற்றும் தூத்துக்குடி - 492 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் -சிறுமிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 93 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், மாநிலம் முழுவதும் 1,83, 772 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments