நல்லா சொன்னாம்பா நம்ம கூல்சுரேஷ்..!

0 16369

அனாவசியமாக வெளியில் சுற்றுவதாலும், கவனக்குறைவாகவும் செயல்படும் நபர்களாலும் அவர்களது குடும்பத்தினர் கொரோனா நோய்தொற்றுக்குள்ளாகி தவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள நடிகர் கூல்சுரேஷ், சுயக்கட்டுப்பாடு ஒன்றே நோய்ப் பரவலை தடுக்கும் என்று ஆதங்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கூல் சுரேஷ். நடிப்பதோடு இல்லாமல் நண்பர்கள் நற்பணி இயக்கம் ஒன்றையும் அவர் நடத்தி வருகின்றார்.

உதவி தேவைப்படுவோருக்கு தன்னால் இயன்ற உதவிகளை வீட்டில் இருந்தபடியே நண்பர்கள் மூலம் செய்து வருகின்றார். அண்மையில் சிலருக்கு ஆவிபிடிக்கும் சிறிய எல்க்ட்ரானிக் கருவிகளை வாங்கி அனுப்பி வைத்தார்.

வெளியூர்களில் இருக்கும் தனது நண்பர்கள் மூலம் உதவி தேவைப்படுவோரின் வீடுகளுக்கே சென்று உதவிகளை கிடைக்க செய்து வரும் கூல் சுரேஷ், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சரியில்லை, சடலங்களை எரிக்க இடமில்லை என்று முக நூலில் வீடியோ பதிவிடும் நபர்களை எச்சரிக்கும் விதமாக ஆதங்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேவையின்றி வெளியில் சுற்றி நோயை பெற்று வீட்டில் உள்ளோருக்கு கொடுத்துவிட்டு பிறரை குறைகூறி என்ன பயன் ?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கூடுமானவரை வீட்டில் இருந்து அரசின் உத்தரவை மதித்து நடப்பதை விடுத்து மளிகை, காய்க்கறி மற்றும் இறைச்சி கடைகளிலும் சமூக இடைவெளியின்றி தினமும் தின்று தீர்ப்பது போல பொருட்கள் வாங்க முண்டியடிப்பதை வழக்கமாக்கியுள்ள பொறுப்பற்ற ஜனங்களையும் வறுத்தெடுத்துள்ள கூல்சுரேஷ், தங்கள் வீடுகளில் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் இருப்பதை மறைத்து, பொறுப்பற்ற சிலர், பஜாருக்கு சென்று மேலும் கூடுதலாக சிலருக்கு நோய்பரவலை உண்டாக்குவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

கூல் சுரேஷின் இந்த ஆதங்க வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்ப்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் சமூகத்தில் அத்தியாவசிய தேவையில்லா மனிதர்களே இல்லை என்று சொல்லி விட இயலாது, தேவைகளை குறைத்துக் கொண்டு சுயக்கட்டுப்பாடுடன் நடந்து கொண்டு சமூகத்தில் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments