ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது நாளை முதல் கடும் நடவடிக்கை - ககன்தீப் சிங் பேடி

0 43658
சென்னை மாநகரில் நாளை முதல், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.

சென்னை மாநகரில் நாளை முதல், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். 

மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற கொரோனா தடுப்புப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகரின் 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள், காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் மண்டல அமலாக்கக் குழு உருவாக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். இந்த குழு, ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 30 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் ககன்தீப் சிங் பேடி விளக்கம் அளித்தார்.

சென்னை மாநகரில் மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறிய ககன்தீப் சிங் பேடி, பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments