தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு முதலீடு செய்பவர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1474
தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு முதலீடு செய்பவர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.

ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியில் முதலீடு செய்வோருக்கு 30சதவீதம் மூலதன மானியம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 6 சதவீத வட்டி மானியத்துடன் உடனடி கடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ மூலம் நிலம் ஒதுக்கீடு செய்யப்படுவதோடு, கட்டணம் ஏதும் இல்லாமல் ஒற்றைச் சாளர முறையில் உடனடி அனுமதியும் வழங்கப்படும் என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments