டெல்லியில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை குறைந்துள்ளதால் இருப்பு உள்ள ஆக்சிஜனை தேவைப்படும் மற்ற மாநிலங்களுக்கு வழங்கலாம் - துணை முதலமைச்சர்

0 1136
டெல்லியில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை குறைந்துள்ளதால் இருப்பு உள்ள ஆக்சிஜனை தேவைப்படும் மற்ற மாநிலங்களுக்கு வழங்கலாம் - துணை முதலமைச்சர்

டெல்லியில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை குறைந்துள்ளதால் தங்களிடம் அதிகமாக இருப்பு உள்ள ஆக்சிஜனை தேவைப்படும் மற்ற மாநிலங்களுக்கு வழங்கலாம் என துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து மருத்துவமனை படுக்கைகளும் காலியாக வருகின்றன.

எனவே 15 நாட்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு  700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில் இப்போது அது  582 மெட்ரிக் டன்னாக குறைந்து விட்டதாக அவர் கூறினார்.

இதை அடுத்து டெல்லிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அதிகமுள்ள ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு வழங்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments