கோவிஷீல்டு இடைவெளி - 12-16 வாரங்களாக்க வேண்டும்

0 3482
கோவிஷீல்டு இடைவெளி - 12-16 வாரங்களாக்க வேண்டும்

கோவிஷீல்டு தடுப்பூசி டோசுகளுக்கு இடையேயான கால இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரைத்துள்ளது.

தடுப்பூசி போடுதில் சில மாற்றங்களை செய்யலாம் என அதற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. 

கோவிஷீல்டு தடுப்பூசி டோசுகளுக்கு இடையேயான இடைவெளியை 8 வாரங்களில் இருந்து 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கலாம் எனவும், கோவேக்சின் தடுப்பூசி டோசுக்கான இடைவெளியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை எனவும் அந்த குழு தெரிவித்துள்ளது.

அதைப் போன்று கொரோனா தொற்று உறுதியானவர்கள் அதில் இருந்து குணமான பிறகு 6 மாதங்கள் சென்ற பிறகே தடுப்பூசி போட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா என்பதை கர்ப்பிணி பெண்கள் அவர்களாகவே முடிவு செய்து கொள்ளலாம்.அதே சமயம் பாலூட்டும் தாய்மார்கள், பிரசவத்திற்குப் பிறகு எந்த நேரத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 முதல் 18 வயது வரை உள்ளவர்களிடம் இரண்டு மற்றும் 3 ஆம் கட்ட தடுப்பூசி கிளினிகல் சோதனையை நடத்த அனுமதிக்கலாம் என இந்த குழு அனுமதி வழங்கி உள்ளது.

ஆனால் இரண்டாம் கட்ட கிளினிகல் சோதனை குறித்த பாதுகாப்பு தரவுகளை தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் வழங்கிய பின்னரே 3 ஆம் கட்ட கிளினிகல் சோதனையை நடத்த அனுமதி வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments