ஸ்விட்சர்லாந்தில் தடுப்பூசி மையமாக மாறிய தேவாலயம்

0 1156
ஸ்விட்சர்லாந்தில் தடுப்பூசி மையமாக மாறிய தேவாலயம்

ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள புனித ஜேக்கப் தேவாலயம் தடுப்பூசி செலுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

அங்கு தடுப்பூசி போட வரும் மக்களை இசைக்கலைஞர் ஒருவர் பியானோ வாசித்து மகிழ்வூட்டிவருகிறார். வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த தேவாலய தடுப்பூசி மையம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு சென்றால் தடுப்பூசி குறித்த அச்சம் ஏற்படும் என்றும், தேவாலயத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது மனதுக்கு அமைதியை தருவதாகவும் அங்கு வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments