சிங்கப்பூரில் இருந்து 2 விமானப்படை விமானங்களில் சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்

0 1173
சிங்கப்பூரில் இருந்து 2 விமானப்படை விமானங்களில் சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்

சிங்கப்பூரில் இருந்து 2 விமானப்படை விமானங்களில் சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள், கண்டெய்னர்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை சேமித்து வைக்கும் சிலிண்டர்கள், கண்டெய்னர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்தியாவுக்கு பல்வேறு உலக நாடுகளும் மருத்துவ உதவிகளை அனுப்பி வருகின்றன. சில நாட்களுக்கு முன் ஜெர்மன், பிரிட்டனில் இருந்து 900 காலி சிலிண்டர்கள் சென்னை வந்தன.

இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து 256 காலி சிலிண்டர்கள் மற்றும் காலி கண்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப்படையின் 2 விமானங்கள் அதிகாலை சென்னை வந்தன.

இதனை பெற்றுக் கொண்ட தமிழக அதிகாரிகள், லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பி வைத்தனர். இன்று இரவு மேலும் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டர்கள் வரவுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments