அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

0 2327
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரிசோதனை எடுக்காமல் கொரோனா அறிகுறிகளுடன் நேற்று நள்ளிரவு 5 பேர் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு வந்தனர்.

அவர்கள் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டு இரு நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண்ணும் உயிரிழந்தார்.

ஒரே இரவில் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளின் அடுத்தடுத்து உயிரிழப்புக்கு என்ன காரணம் என மாவட்ட சுகாதாரத்துறை விசாரித்து வருகிறது.

அதேசமயம், 6 பேரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தார்களா அல்லது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்களா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments