ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த நோயாளிகள் 3 பேர் ஆம்புலன்சிலேயே உயிரிழப்பு

0 3770

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து ஆம்புலன்சிலேயே காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 900 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்கனவே நிரம்பியதால் சிகிச்சைக்கு வருபவர்களை உடனடியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

அதன் காரணமாக நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் ஆம்புலன்சில் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பல மணி நேரம் ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் நேற்று 6 பேர் உயிரிழந்த நிலையில் இன்று காலை மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments