இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

0 1718
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

டந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3  லட்சத்து 62 ஆயிரத்து 727 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் கொரோனா பாதித்தவர்களில் 4 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா பாதித்து மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் உள்ளவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்களையும் சேர்த்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 37 லட்சத்து 3 ஆயிரத்து 665 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 317 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுவரை 17 கோடியே 72 லட்சத்து 14 ஆயிரத்து 256 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments