2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைக்கு நிபுணர் குழு பரிந்துரை

0 2178

இரண்டு வயது குழந்தைகள் முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மருத்துவ நிபுணர்க் குழு அனுமதி அளித்துள்ளதாகவும் இரண்டாம், மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் திட்டத்தில் இது செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல் கட்டமாக டெல்லி,நாக்பூர், பாட்னாவில் 500 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.

ஃபைசர்- பயோ என்டெக் தடுப்பூசி முதல்முறையாக 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்கான அனுமதியை அமெரிக்கா அளித்துள்ளது.

உலக அளவில் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் முதல் கொரோனா தடுப்பூசி இது என்று கருதப்படுகிறது. ஆனால் அதனினும் ஒருபடி மேலாக தற்போது இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்த ஏற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments