கேரளாவில் மனைவியை பார்க்கும் ஆசையில் பேருந்தை திருடிய கணவன் கைது

0 5893
கேரளாவில் ஊரடங்கின் போது மனைவியை பார்க்கும் ஆசையில் பேருந்தை திருடி 200 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற கணவன் கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் ஊரடங்கின் போது மனைவியை பார்க்கும் ஆசையில் பேருந்தை திருடி 200 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற கணவன் கைது செய்யப்பட்டார்.

திருவல்லாவை சேர்ந்த பினூப் என்பவர் கோழிக்கோட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்க பினூப் விரும்பினார். ஆனால் சொந்த ஊர் செல்ல பேருந்து கிடைக்காததால் கோழிக்கோடு அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்து திருடிக் கொண்டு
புறப்பட்டார்.

குமரகம் என்ற இடத்தை கடந்த போது போலீசார் பேருந்தை நிறுத்தி விசாரித்ததில் பினூப் உண்மையை ஒப்புக் கொண்டார். இதை அடுத்து பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் பினூப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments