தி.மு.க., காங்கிரஸ் உள்பட 12 கட்சிகளின் தலைவர்கள் பிரதமருக்கு கூட்டாக கடிதம்

0 1231

நாடு முழுவதும் இலவச தடுப்பூசி முகாம்களை நடத்துதல், வேலைவாய்ப்பின்றி தவிப்போருக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 12 முக்கிய எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.

உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் உடனடியாக தேவையான தடுப்பு மருந்துகளை மத்திய அரசு கொள்முதல் செய்தல், உள்நாட்டு தடுப்பு மருந்து உற்பத்தி விரிவாக்கத்திற்கு உடனடி உரிமம், மத்திய விஸ்டா திட்டத்தை உடனடியாக நிறுத்தி அதற்கு செலவிடப்படும் தொகையை ஆக்சிஜன் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கு செலவிடுதல், பட்ஜெட்டில் தடுப்பு மருந்துக்காக ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments