ஆக்சிஜன் கையிருப்பு-மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

0 1959
நாட்டில் உள்ள ஆக்சிஜன் கையிருப்பு, மருந்துகள், வெளிநாட்டு உதவிகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் உள்ள ஆக்சிஜன் கையிருப்பு, மருந்துகள், வெளிநாட்டு உதவிகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

கடந்த சில நாட்களில் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அத்தியாவசியமான மருந்துகளின் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெம்டிசிவர்  மருந்து பல லட்சம் டோஸ்கள் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் பிரதமருக்கு  விளக்கினர்.

மருந்து உற்பத்தியாளர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து கலந்துரையாடி வருவதால் அவர்களும் பூரண ஒத்துழைப்பு அளிக்க உறுதியளித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்தும் கணிசமான அளவுக்கு மருத்துவ உதவிகள் குவிந்து வருகின்றன. இந்த நிலைமையையும் பிரதமர் ஆய்வு செய்து வெளிநாட்டு உதவிகளை உரிய நேரத்தில் மாநில அரசுகளுக்கு விநியோகிப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

பயன்படாமல் சில மாநிலங்களில் உபரியாகக் கிடக்கும் வெண்டிலேட்டர்களை தேவை இருக்கும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் மோடி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments