சென்னையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்

0 3378

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க, அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசித்து உடனுக்குடன் உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது

கூட்டத்தில் பங்கேற்க 13 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சி சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் 2 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும், அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments