இளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து

0 3860

சென்னை மாநகரில் கொரோனா நோயாளிகளுக்காக வீடு தேடி மருந்து மற்றும் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் புதிய சேவையை ஒரு தனியார் தொண்டு நிறுவனம் துவக்கி உள்ளது . முழுக்க முழுக்க இளைஞர்களால் உருவாக்கப்பட்டு உள்ள அமைப்பின் மனித நேய உதவி குறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித் தொகுப்பு : -

தவிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் சென்னையில் RYA Metro Star என்ற இளைஞர் அமைப்பு புதிதாக களமிறங்கி உள்ளது. 200 இளைஞர்கள் இணைந்து உருவாக்கி உள்ள தொணடு நிறுவனம் மூலம் உதவி கோரும் கொரோனோ நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வீடு தேடி விநியோகித்து வருகிறார்கள்.

98413 98413 என்ற செல்போனுக்கு தொடர்பு கொண்டால் வீடியோ கால் மூலம் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறும் தொண்டு நிறுவனத்தினர், கொரோனாவை கண்டு யாரும் அச்சப்பட தேவை இல்லை என்கிறார்கள். மருத்துவமனையிலோ அல்லது வீட்டு தனிமையில் இருந்தாலோ, கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, அவர்களது குடும்பத்தினருக்கும் 10 நாட்களுக்கு 3 வேளை உணவு வழங்கவும் இளைஞர் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னை இளைஞர்கள் குழு, இதுவரை ஆயிரம் பேர் வரை உதவி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எத்தனை பேர் உதவி கோரினாலும் உதவி செய்ய RYA Metro Star என்ற இளைஞர் குழுவினர் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சென்னை மாநகரில் எந்த பகுதியாக இருந்தாலும், உரிய சான்றிதழுடன் தங்களை தொடர்பு கொண்டால், நிச்சயம் உதவி கிடைக்கும் என இவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இக்கட்டான சூழலில் உதவி கிடைக்காதா? என ஏங்கும் கொரோனா நோயாளிகளுக்கு சென்னை இளைஞர் குழுவினரின் சேவை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. நாளுக்கு நாள், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், RYA Metro Star குழுவினரின் சேவை, பொதுமக்கல் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments