கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளை சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம்

0 1702

கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வியாழனன்று சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது .

தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 -வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் இக்கூட்டம் மாலை 5 மணிக்கு துவங்கும்.

கொரோனா தடுப்புப்பணிகள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்குமாறு, சட்டப்பேரவை கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments