"கொரோனா வைரசை எளிதாக கருத வேண்டாம்"-கொரோனாவுக்கு பலியான 7 மாத கர்ப்பிணி பெண் மருத்துவரின் கடைசி வீடியோ

0 63235
அடுத்த மாதம் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணியான பல் மருத்துவர் கொரோனாவுடன் போராடி அதற்கு பலியாகி விட்ட நிலையில், இறப்பதற்கு முன் அவர் கொரோனா குறித்து வெளியிட்ட கடைசி வீடியோவை அவரது கணவர் வெளியிட்டுள்ளார்.

34 வயதான டிம்பிள் அரோரா சவுலா என்ற பெண் மருத்துவருக்கு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது அவர் இரண்டாம் முறையாக கருவுற்று 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். தொற்று தீவிரமாகி, இரண்டு வாரங்களில் அவரது குழந்தை கருவிலேயே இறந்து போனது. அதற்கு அடுத்த நாள் டிம்பிள் அரோராவும் கொரோனாவுக்கு பலியாகி விட்டார். இறப்பதற்கு முன் கடந்த மாதம் 17 ஆம் தேதி தமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அவர் அனுப்பிய வீடியோ செய்தியில், யாரும் கொரோனா வைரசை எளிதாக கருத வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தமது மனைவியின் விருப்பப்படி, மக்களிடம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த அந்த வீடியோவை வெளியிட்டதாக கணவர் ரவிஷ் சவுலா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments