ஹமாஸ் தாக்குதலில் கேரளப் பெண் மறைவுக்குத் துக்கம் கடைப்பிடிக்கும் இஸ்ரேல்

0 4534
ஹமாஸ் இயக்கத்தினரின் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த கேரளப் பெண் உயிரிழப்புக்கு நாடே துக்கம் கடைப்பிடிப்பதாக இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இயக்கத்தினரின் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த கேரளப் பெண் உயிரிழப்புக்கு நாடே துக்கம் கடைப்பிடிப்பதாக இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் வீட்டு வேலையாளாகப் பணியாற்றிய சவுமியா, ஹமாஸ் இயக்கத்தினரின் ராக்கெட் தாக்குதலில் உயிரிழந்தார். கேரளத்தின் உள்ள கணவர் சந்தோசுடன் அவர் செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

சவுமியாவின் மறைவுக்கு இஸ்ரேல் துக்கம் கடைப்பிடிப்பதாக அந்நாட்டுத் தூதர் ரோன் மால்கா தெரிவித்துள்ளார். இஸ்ரேல் சார்பில் இரங்கல் தெரிவித்துள்ள அவர், சவுமியா குடும்பத்தினருடன் உள்ள படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

தாயை இழந்து தவிக்கும் 9 வயது சிறுவனைப் பார்த்தால் மும்பைத் தாக்குதலில் பெற்றோரை இழந்த இரண்டரை வயதுக் குழந்தை மோசே நினைவுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments