கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் கோர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

0 2049

கொரோனா தடுப்பு மருந்து இறக்குமதி செய்ய உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் தடுப்பு மருந்து ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளோருக்குக் குறுகிய காலத்தில் தடுப்பூசி போடுவதற்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் கொரோனா தடுப்பு மருந்தை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 டன்னாக உயர்த்தப்பட்ட போதிலும், கூடுதலாக ஆக்சிஜன் தேவைப்படுவதால் போதிய ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டது.

பிற மாநிலங்களில் இருந்து இரயில்களில் ஆக்சிஜனைக் கொண்டுவரவும், அதைத் தேவைப்படும் மருத்துவமனைகளுக்குச் சீராக வழங்கவும் தொழில்துறைக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments