டிஆர்டிஓ-வின் 2-DG மருந்து பாதுகாப்பானது,செயல்திறன் மிக்கது.. விஞ்ஞானி தகவல்..!

0 6798
டிஆர்டிஓ கண்டுபிடித்த 2-deoxy-D-glucose மருந்து மிகவும் பாதுகாப்பானது என்றும் கொரோனா நோயாளிகள் விரைந்து குணமாக அது உதவும் எனவும் டிஆர்டிஓ-வின் இன்மாஸ் மருத்துவ கழக விஞ்ஞானி சுதிர் சந்தனா தெரிவித்துள்ளார்.

2 மற்றும் 3 ஆம் கட்ட கிளினிகல் சோதனைகளின் போது 330 நோயாளிகளிடம் இந்த மருந்து திறம்பட செயலாற்றியதாக அவர் கூறினார். கொரோனா நோயாளிகள் 2 முதல் 3 நாட்கள் முன்னதாகவே குணமாக அது உதவியது.

மூன்றாம் கட்ட சோதனைகளில் மூன்றாம் நாளே 42 சதவிகித நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் உதவி தேவையில்லாத நிலை ஏற்பட்டதாகவும், வழக்கமான சிகிச்சையில் இது 31 சதவிகிதமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற மருந்துகளுடன் இந்த  2-deoxy-D-glucose மருந்தையும் கொடுத்தால்,ஆக்சிஜனை நம்பி இருக்க வேண்டிய நிலைமையை மாற்றலாம் என தரவுகள் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments