இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..!

0 2132

மேற்காசியாவில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன ஹமாஸ் போராளி குழுவுக்கும் இடையே நடக்கும் போருக்கு நிகரான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில்  பலர் கொல்லப்பட்ட நிலையில், ராக்கெட் தாக்குதலில் இரு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். 

ஏற்கனவே இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை போராளிகளுக்கும் இடையே உள்ள பகையின் பின்னணியில், பாலஸ்தீனர்களை ஜெருசலேமில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களில் ஒன்றான ஜெருசலேம் மஸ்ஜிதுல் அக்சாவில் தொழ இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.

இதனால் காசா நிலப்பரப்பில் இருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீதி ராக்கெட் தாக்குதலில் நடத்தினர். அதில் இஸ்ரேலியர்கள் 6 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பாலஸ்தீன் பகுதியான காசாவை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட தடவை ராக்கெட்டுகளை இன்று காலை வீசியது.

பலமாடி கட்டிடம் ஒன்று முழுமையாக சேதமடைந்த துடன், 10 குழந்தைகள் உட்பட பாலஸ்தீனை சேர்ந்த 43 பேர் கொல்லப்பட்டனர். 220 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த தாக கூறப்படுகிறது. இதற்கு பழி வாங்கும் வகையில் ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி அதிரடி ராக்கெட்டுகளை வீசினர்.

இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சுகளுக்கு பதிலளிக்கும் வகையில் டெல் அவிவை நோக்கி 110 ராக்கெட்டுகளையும், மற்றோர் இஸ்ரேல் நகரான பீர்ஷெவா மீது 100 ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாசும் வேறு சில குழுக்களும் தெரிவித்துள்ளன. இதில் டெல்அவிவின் முக்கிய வர்த்தகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. 

இன்று காலை நடந்த இந்த தாக்குதால் திடுக்கிட்ட டெல் அவிவ் வாசிகள் பதுங்கு குழிகளில் அடைக்கலமாயினர்.

இந்த நிலையில் தனது தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 2014 காசா போருக்குப் பிறகு நடக்கும் உக்கிரமான தாக்குதல் இது என்பதால், மீண்டும் போர் வெடித்து விடுமோ என சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலை இரு தரப்பும் உடனடியாக நிறுத்த வேண்டும் என மத்திய கிழக்கிற்கான ஐ.நா. அமைதி தூதர் டோர் வென்னஸ்லான்ட் டுவிட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments