இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம்

0 5753

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனை முன்பு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் காத்திருக்கும் சூழ்நிலை இருந்து வரும் நிலையில், இறந்தவர்களின் உடலை தகனம் செய்யவும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் மின்மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களை தகனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்களுடன் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.

ஒரு உடலை எரிப்பதற்கு 2 முதல் 3 மணி நேரம் வரை ஆவதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதிகளவிலான சடலங்கள் கொண்டுவரப்படுவதாலயே கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் மின்மயானங்களில் சடலங்கள் குவிந்து வருகிறது.

கீரைத்துறை மின் மயானத்தில் வரிசையாக சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கொரோனா குறித்த அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் கீரைத்துறை மயானத்தில் 45 சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மின் மயானங்களில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்காக உறவினர்கள் வரிசையில் காத்துகிடக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments