சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக வதந்தி : ஆரோக்கியமாக இருப்பதாக விளக்கம்

0 5974
சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக வதந்தி : ஆரோக்கியமாக இருப்பதாக விளக்கம்

90ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோவான சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவிய நிலையில், நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

சக்திமான், மகாபாரதம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் முகேஷ்கண்ணா, கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக செய்திகள் பரவின.

இந்த நிலையில், வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும், ரசிகர்களின் ஆசிர்வாதத்தால் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் முகேஷ் கண்ணா கூறியுள்ளார்.

இதுபோன்று வதந்திகளை பரப்புவோரை பிடித்து அடிக்கவேண்டும் எனவும் முகேஷ் கண்ணா ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments