கொரோனா தொடர்பாக மக்களிடம் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஜே.பி.நட்டா கடிதம்

0 972
கொரோனா தொடர்பாக மக்களிடம் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஜே.பி.நட்டா கடிதம்

கொரோனா தொடர்பாக மக்களிடம் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கேட்டுக்கொண்டுள்ளார்.

சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் மக்களிடையே தவறான தகவல்களைப் பரப்புவதாதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரை வலுவிழக்கச் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடியுள்ளதாகவும் நட்டா குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments