"நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள்"-செவிலியர்களின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்ட இஎஸ்ஐ மருத்துவமனை டீன்

0 15523
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழாவில் மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் செவிலியர்களின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழாவில் மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் செவிலியர்களின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் பெருந்தொற்றை கருத்தில் கொள்ளாமல் நோயாளிகளுக்கு உதவும் செவிலியர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என புகழாரம் சூட்டினார்.

அப்போது உணர்ச்சிவசப்பட்ட டீன் ரவிச்சந்திரன், கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து  நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள் என கூறி கண்ணீர் விட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments