அரபிக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக உருமாற வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 965
அரபிக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக உருமாற வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக உருமாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும் 14ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இது, வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடலில் 16-ஆம் தேதி புயலாக வலுப்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 14-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். கனமழையால் விளைநிலங்கள் பாதிக்கப்படாதவாறு விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரப்பிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா பகுதிகள் மாலத்தீவு, குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு 14-ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் இரவுக்குள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments