கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை

0 878
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை

துரை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்து வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

தென்மாவட்டங்களைச் சேர்ந்தோர் ரெம்டெசிவிர் மருந்துக்காக மதுரைக்கு வருவதால், டோக்கன் வாங்கவே மணிக்கணக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், ரெம்டெசிவிர் மருந்தை குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்து வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக வீடியோ வெளியாகியுள்ளது.

தனது தாயிக்காக ரெம்டெசிவிர் வாங்க வந்து 3 நாட்களாக மருந்து கிடைக்காமல் காத்திருந்த நபர் ஒருவர், இந்த முறைகேடுகளை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ரெம்டெசிவிர் மருந்து குப்பைத் தொட்டிக்கு வந்தது எப்படி? என அந்த நபர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நிற்கும் ஊழியர், பின்னர் தெரிந்தவர்களுக்காக டோக்கன் போட்டு வாங்கி வைத்திருப்பதாக மழுப்புகிறார். 

மருந்து விற்பனை செய்யும் இடத்தில் இருந்து சிலவற்றை மட்டும், ஊழியர் வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

சுமார் ஒன்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 6 வயல்கள் கொண்ட ரெம்டெசிவிர் மருந்து பெட்டி 50ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, மருந்து வாங்குவதற்கான டோக்கன் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது வெளியான வீடியோவால் முறைகேடு உறுதியாகியுள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments