வேகமாக பரவும் கொரோனா இரண்டாம் அலை.. கிராம பகுதிகளில் தொற்று அதிகரிப்பு..!

0 3123

நாட்டில் உள்ள 700 க்கும் அதிகமான மாவட்டங்களில், 533 மாவட்டங்களில் நடத்தப்படும் சோதனைகளில் 10 சதவிகிதத்தை விடவும் அதிகமாக தொற்று உறுதி செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில், கிராமபுறங்களில் தொற்று அதிகம் பரவுவதை இது காட்டுகிறது. இந்த நிலையில், இரண்டாம் அலை வேகமாக இருப்பதால், கொரோனா மொத்த சோதனைகளில் ரேபிட் ஆன்டிஜன் சோதனைகள் 30 சதவிகித த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை மாற்ற வேண்டும் என ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா கேட்டுக் கொண்டுள்ளார்.

கிராம புறங்களில் சோதனைகளை அதிகரிக்க அங்குள்ள பள்ளிகளிலும், சமுதாய நலக்கூடங்களிலும் ரேபிட் ஆன்டிஜன் சோதனைகளை அதிக அளவில் நடத்த வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

வைரஸ் தொற்று தேசிய அளவில் 21 சதவிகிதமாக இருக்கும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் அது 42 சதவிகிதமாக அதிகரித்து காணப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments