பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சம்

0 31573
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சம்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகளும், டீசல் விலை 24 காசுகளும் உயர்த்தப்பட்டு இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலையைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்த்தப்பட்டு 93 ரூபாய் 84 காசுகளாக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்த்தப்பட்டு 87 ரூபாய் 49 காசுகளாக உள்ளது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 32 ரூபாய் 98 காசுகள் மத்திய அரசின் உற்பத்தி வரியாகவும், 19 ரூபாய் 55 காசுகள் மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரியாகவும் உள்ளது.

ஒரு லிட்டர் டீசல் விலையில் 31 ரூபாய் 83 காசுகள் மத்திய அரசின் உற்பத்தி வரியாகவும், 10 ரூபாய் 99 காசுகள் மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரியாகவும் உள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments