கோவேக்சின் தடுப்பூசியை 2-18 வயது வரை உள்ளவர்களிடம் சோதித்துப் பார்க்க மத்திய அரசு நிபுணர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்

0 862
கோவேக்சின் தடுப்பூசியை 2-18 வயது வரை உள்ளவர்களிடம் சோதித்துப் பார்க்க மத்திய அரசு நிபுணர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்

கோவேக்சின் தடுப்பூசியை இரண்டு முதல் 18 வயது வரை உள்ளவர்களிடம் சோதித்துப் பார்க்க மத்திய அரசின் தடுப்பூசி நிபுணர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் இந்த தடுப்பூசியை, 2 முதல் 18 வயதினரிடம்  2 மற்றும் 3 ஆம் கட்ட கிளினிகல் சோதனை நடத்தலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கோவேக்சின் தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரிவினருக்கும் போடப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவும் கொரோனா இரண்டாம் அலையில், இளம் வயதினரும் அதிக அளவில் தொற்றுக்கு ஆளாவதால், அவர்களுக்கும் தடுப்பூசி போட துவங்க வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் 2 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடத் துவங்குவதன் முன்னோடியாக கிளினிகல் சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments