கொரோனா சிகிச்சை பணியில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு -முதலமைச்சர் அறிவிப்பு

0 4152
கொரோனா சிகிச்சை பணியில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு -முதலமைச்சர் அறிவிப்பு

கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், கொரோனா இரண்டாம் அலையில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அல்லும் பகலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சி.டி. ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்திப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதக் காலத்துக்கு,  மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், பிற பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments