இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் : ராக்கெட் வீச்சில் உயிரிழந்த கேரள இளம்பெண்

0 6803
இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் : ராக்கெட் வீச்சில் உயிரிழந்த கேரள இளம்பெண்

இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையேயான தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலமில் உள்ள அல் அக்ஸா என்ற மசூதி இஸ்லாமியர்களின் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. இங்கிருக்கும் மற்றொரு சுவர் யூதர்களின் புனிதச் சுவராக வழிபடப்படுகிறது.

இந்நிலையில் அல் அக்ஸா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த இஸ்ரேல் அனுமதி மறுத்தது. மேலும் பாலஸ்தீன பகுதியில் தனது ஆக்கிரமிப்புகளை அகற்றவும் இஸ்ரேல் மறுத்தது.

இதனால் பாலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்தியதில், இருதரப்பினரிடையே மோதல் உண்டானது. இதில் 700க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியை நோக்கி ஏவுகணைகனை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் காரணமாக 10 குழந்தைகள் உள்பட 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் பாலஸ்தீனத்தில் செயல்படும் சர்வதேச ஊடக மையமான அல் ஜொஹரா என்ற கட்டடத்தின் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் 3 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதனால் டெல் அவிவ் நகரை நோக்கி ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 3 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் பீர்ஷேவா நகரை நோக்கி 100க்கும் அதிகமான ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இதனிடையே அஸ்கிலான் நகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான சவுமியா என்பவர் அங்கு வீடு ஒன்றில் செவிலியராகப் பணியாற்றி வந்த நிலையில் குண்டு வீச்சில் கொல்லப்பட்டார்.

சவுமியா கொல்லப்பட்டதற்கு கண்டமும், இரங்கலும் தெரிவித்துள்ள கேரள அமைச்சர் முரளீதரன், அவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments