19 கொரோனா கண்காணிப்பு மையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர்

0 1798
19 கொரோனா கண்காணிப்பு மையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சி உட்பட்ட 19 கொரோனா கண்காணிப்பு மையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லவன் சாலையிலுள்ள கேந்திர வித்தியாலய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா அறிகுறிகளுடன் பரிசோதனைக்காக வரும் அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது என்றும், தொழில்துறை, சுகாதாரத்துறை இணைந்து வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டு வரும் பணியை மேற்கொண்டு வருகிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments