24 மணிநேரமும் கொரோனா நோயாளிக்கு உதவிடும் வார் ரூம்..!

0 3261
24 மணிநேரமும் கொரோனா நோயாளிக்கு உதவிடும் வார் ரூம்..!

கொரோனலா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள்,  ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை, வெண்டிலேட்டர் வசதி, இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசு சார்பில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் வார் ரூம் எனப்படும் கட்டளை மையம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதித்த நோயாளிகள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே, தங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை 24 மணிநேரமும் பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வார் ரூமில் மருத்துவ பணியாளர்கள்,
கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொற்று பாதித்தவர்கள், 104 சேவை எண்ணை தொடர்பு கொள்ளும் போது, வார் ரூம் ஊழியர்கள், நோயாளியின் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, நாடி துடிப்பு, எந்த பகுதியில் நோயாளி உள்ளார் உள்பட அனைத்து தகவல்களையும் முழுமையாக பெற்று, அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பிவைக்கின்றனர்.

மேலும், ஆம்புலன்சில் உள்ள அவசரகால உதவியாளர் மூலம் நோயாளியின் உடல் நிலையை கண்டறிந்து, ஆக்சிஜன், வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உதவியுடன், உடனடியாக அருகில் உள்ள சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு, வாட்ஸ் ஆப் மற்றும் 104 மருத்துவ உதவி மையம் மூலம் தகவல் கொடுத்து அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை, அதிக பட்சமாக அரை மணி நேரத்திற்குள்ளாகவே, செய்து வருகின்றனர்.

கால் வெயிட்டிங் தடை இல்லாமல் ஒரே நேரத்தில் 30 நபர்கள் வரை தொடர்பு கொள்ளும் வகையில் 104 எண் செயல்படுவதாகவும், தமிழகத்தில் எந்த பகுதியாக இருந்தாலும், அழைப்பு வந்த அரை மணி நேரத்திற்கு உள்ளாகவே நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்ப, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதாகவும் கட்டளை மையத்தின் ஊழியர் ரூபிதா., வார் ரூம் ஊழியர் தெரிவித்தார்.

இதனிடையே, டிஎம்எஸ் வளாகத்தில தேசிய சுகாதார திட்ட அலுவலகத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தாரீப் அகமது பங்கேற்ற இந்த கூட்டத்தில் வார் ரூம் மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும், கொரோனா நோயாளிக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்ட உதவிகளை உடனுக்குடன் செய்து தர துரிதமாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments