கிணத்த காணலன்னு புகாரா..? நெல்லை சிவாவுக்கு மாரடைப்பு..!

0 6723
கிணத்த காணலன்னு புகாரா..? நெல்லை சிவாவுக்கு மாரடைப்பு..!

100க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நெல்லை தமிழால் நகைச்சுவை காட்சிகளில் சிரிக்கவைத்த நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் அவருக்கு வயது 69. 

வடிவேலுவின் குழுவில் மிக முக்கிய அங்கம் வகித்த நகைச்சுவை கலைஞர் நெல்லை சிவா..! கிணற்றை காணோம் என்று புகார் அளிக்க வந்த வடிவேலுவிடம் நெல்லை தமிழில் காவல் ஆய்வாளர் வேடத்தில் சிவா அடிக்கும் லூட்டி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்..!

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த வேப்பிலாங்குளத்தை பூர்வீகமாக கொண்ட சிவனாதன் சண்முக வேலன் ராமமூர்த்தி தான் சினிமாவுக்காக தனது பெயரை நெல்லை சிவா என்று சுறுக்கிக் கொண்டு நடித்து நெல்லை தமிழால் 100க்கும் மேற்பட்ட படங்களில் அனைவரையும் சிரிக்க வைத்த நகைச்சுவை கலைஞர்.

1985ல் ஆண்பாவம் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தாலும் நடிகர் வடிவேலுவின் காமெடி பட்டாளத்தில் இணைந்த பின்னர் தான் சிவாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது எனலாம் அந்த அளவிற்கு இருவரும் இணைந்த காமெடிகள் ஒவ்வொன்றும் நகைச்சுவை பட்டாசுகளாக இருந்தன.

அதே நேரத்த்தில் கவுண்டமணியுடனும் நகைச்சுவை காட்சிகளில் தோன்றியுள்ளார்.

அஜீத்தின் அட்டகாசம் படத்தில் நெல்லை தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நெல்லை சிவா

வடிவேலு சினிமாவை விட்டு ஒதுங்கியதால் முன்பு போல போதுமான பட வாய்ப்பின்றி தவித்துவந்த நெல்லை சிவா சிறிய படங்களில் நடித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். ஆரம்ப காலத்தில் நிரந்தரமான வருவாய் இல்லாததால் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சொந்த ஊரில் இருந்த நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments