தெலுங்கானாவில் இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்

0 3247
தெலுங்கானாவில் இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்

தெலுங்கானாவில் இன்று காலை 10 மணி முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசியத் தேவைகளுக்காக தளர்வு அளிக்கப்படுவதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழு ஊரடங்கை அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல்20ம் தேதி முதல் தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

வியாழக்கிழமை விசாரணை நடத்த  இருந்த வழக்கை தெலுங்கானா உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அவசர விசாரணைக்கு ஏற்று மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. உண்மை யதார்த்த நிலை வேறாக இருக்கும் போது அரசு மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பது போல தோற்றத்தை ஏற்படுத்துவதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments