திரைப்பட காமெடி நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்

0 9401
திரைப்பட காமெடி நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக நெல்லையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

பணகுடி அருகே வேப்பிலான்குளத்தை சேர்ந்த நெல்லை சிவா ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

வெற்றிக்கொடிகட்டு, தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தனது நெல்லை வட்டார வழக்கில் பேசும் முறையால் பரவலாக அறியப்பட்டார்.

இவருக்கு ஏறக்குறைய 60 வயதாகும் நிலையில், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மாலை 6:30 மணியளவில் தனது சொந்த ஊரில் காலமானார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments