தொடரும் கொரோனாவின் கொடூரம்.. மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் உயிரிழந்ததாக இளைஞர் வெளியிட்ட வீடியோ

0 42341
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உதவிக்கு யாரும் வராத காரணத்தினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்ததாக இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில் உறவினர்கள் கதறி அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உதவிக்கு யாரும் வராத காரணத்தினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்ததாக இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில் உறவினர்கள் கதறி அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது தாயை கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதித்திருந்த நிலையில், நோயாளிகளுக்கு சரிவர ஆக்சிஜன் விநியோகம் கிடைப்பதில்லை என புகார் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சிகிச்சையில் இருந்த 30வயதான பெண் ஒருவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உதவிக்கு யாரும் இல்லாமல் உடல்நிலை மோசமடைந்து அந்த பெண் உயிரிழந்த காட்சிகளும் பதிவாகியுள்ளன. மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கதறி அழுவது கண்கலங்கச் செய்கிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வீடியோவில் கோரிக்கை விடுக்கபட்டுள்ள நிலையில், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் உறவினர்கள் வீடியோ எடுத்து மக்களிடையே பீதியை கிளப்பும் வகையில் செயல்படுவதாகவும், மிகுந்த சிரமங்கள், மன உளைச்சலுக்கு இடையே பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments